November 27, 2021

பொன்னேரி கிளை சிறைச்சாலையில், தலைவிரித்தாடுகிறது லஞ்சம், காத்து கிடக்கின்றனர், பணம் இல்லாத ஏழை சிறை கைதிகளின் உறவினர்கள்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நீண்ட காலமாக கிளை சிறை இயங்கிவருகிறது. இங்கு சுமார் 65 இல் இருந்து 100 பேர் வரை கைதிகளாக சிறை வைக்கப்படும் அளவிற்க்கு வசதிகளை கொண்டது. இந்த நிலையில், இந்த கிளை சிறைச்சாலையில் முன்பெல்லாம் கைதிகளை பார்ப்பதற்கு உரிய ஆவணங்களுடனும் சரியான காரணத்தோடும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இவர்கள் எதும் சினிமா தியேட்டரில் டிக்கட் எடுக்க இப்படி போட்டி போடவில்லை, பொன்னேரி கிளைசிறைசாலை வாயலில் தான் இந்த கட்சி

ஆனால், சமீப காலமாக காசு கொடுத்தால் நேரம் காலமின்றி எளிதாக கைதிகளை பார்க்க கூடிய நிலை தற்போது உருவாகி இருக்கிறது. கைதிகளைப் பார்க்க வரும் ஏழைப் பெண்கள் கைக்குழந்தைகளுடன் வெகுநேரம் நின்று இருந்தாலும், அங்கு பணியில் இருக்கும் காவலர்கள் கைதிகளை பார்க்க அனுமதிப்பது இல்லை. ஆனால் பணத்துடன் வரக்கூடியவர்கள் நேரில் சென்று பணத்தைக் கொடுத்து கைதியாக இருக்கக்கூடிய தங்கள் உறவினர்களை பார்த்துச் செல்கின்றனர்.

ஆனால் கையில் பணம் இல்லாத ஏழை பெண்கள் திரும்பி செல்வது மிகவும் பரிதாபமாக உள்ளது. 500 லிருந்து 1000 ரூபாய் வரை கொடுத்தால் எதை வேண்டுமானாலும் சிறையில் உள்ள கைதிகளிடம் கொடுக்கலாம் மற்றும் பேசலாம். பொன்னேரி சிறைக்காவலர்கள் இதற்காக லஞ்சமாக ஏழை, எளியவர் என்று பாராமல் தொகையை கேட்டு வாங்குகின்றனர்.

இந்த கிளை சிறை அருகிலேயே கூடுதல் மாவட்ட முதன்மை நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் இருக்கிறது. இந்த அலுவலங்களுக்கு அருகிலேயே இப்படி லஞ்சம் தாண்டவமாடும் பொன்னேரி கிளை சிறையில் கைதிகளைக் காண லஞ்சம் கேட்கப்படுவது பெரும் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது. இதனை உடனடியாக மாவட்ட காவல்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed