July 28, 2021

முன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கார்திகேயன் திருவுருவ படத்தை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் திறந்து வைத்தார்…

1 min read

செங்குன்றம் அடுத்த புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில்  புழல் ஒன்றிய திமுக  சார்பில், முன்னாள் புழல் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர்  மறைந்த கார்த்திகேயன் முதலாம் ஆண்டு  நினைவு அஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா, ஊராட்சி கழக செயலாளர் வழக்கறிஞர் செல்வமணி, ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா கல்விநாதன் ஆகியோர்  தலைமையில் நடை நடை பெற்றது.

கிளை கழக செயலாளர்கள் கல்விநாதன், உதயகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வி மதுரைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு  கட்சி கொடியை ஏற்றி வைத்து, மறைந்த கார்த்திக்கேயன்  திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி, இரண்டு நிமிடம் மௌனஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சுமார் 500 க்கும் மேற்பட்டஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதணைத்தொடர்ந்து ஊராட்சி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் நிர்வாகிகள் சௌந்தரராஜன், நாடராசன், பரமசிவம், பவுடர்குமார், தினேஷ்குமார், வேலாயுதம், சுகுமார், விஜி, செல்வம், வேலு, ஐயப்பன், திருநாவுகரசு, சேகர்,  சுந்தரவடிவேலு, மணி, பிரகாஷ், கார்த்திக்கேயன் குடும்பத்தினர்கள் ஈஸ்வரி, குமுதா, விஜி மற்றும்  வழக்கறிஞர் செந்தில்குமார்,  புயல்பிரசாத், கோகுல், ஸ்ரீதர், கார்த்திக், ஹேமா, தினேஷ், மாணிக்கம்   உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *