October 24, 2021

அத்திப்பட்டில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், ஊராட்சி மன்ற துணை தலைவர் கதிர்வேலு நிவாரண பொருட்களை வழங்கினார்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து ஏராளமான கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் தூயவன், நிர்வாகிகள் விஜயா, நந்தினிபிரியா, சண்முகபிரியா, கன்னிகா, ஷகிராபானு, ஓசன்னா ஆகியோர் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள், முகக்கவசங்கள், கிருமிநாசினி ஆகியவற்றை ஏழை எளிய மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தனர்.

இந் நிகழ்ச்சியில், அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிர்வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொது மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். இதே போல செப்பாக்கம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெற்றி நிச்சயம் தொண்டு நிறுவனத்தினர் நிவாரண உதவிகளை வழங்கினர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed