August 6, 2021

திருச்செந்தூர் அருகே, 2 கோடி மதிப்பிலான, திமிங்கிலத்தின் உமிழ்நீரை, காரில் கடத்திய 5 பேர் கைது…

1 min read

திருச்செந்தூர் உட்கோட்டம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் அவர்களின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் ஞானசேகரின் மேற்பார்வையில், காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் காவலர்கள் திருச்செந்தூர் நகர பகுதிகளில் ரோந்து செய்து வாகன தணிக்கை செய்து வந்தனர்.

அப்போது, இரவு 11.30 மணி அளவில் திருச்செந்தூர் தாலுகா ஆபீஸ் ரோட்டில் உள்ள அழகர் லாட்ஜ் முன்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு காரில் வந்த,
தஞ்சாவூரை சேர்ந்த இளங்கோவன் ,
அருப்புக்கோட்டையை சேர்ந்த ராம்குமார், நாகப்பட்டினம், ஆலியூரை சேர்ந்த
முகமது அஸ்லம், திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த ராஜா என்கிற ராஜாமுகமது,
தஞ்சாவூரை சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோரிடம் விசாரணை செய்யப்பட்டது.

மேற்படி நபர்களிடம், விசாரணை நடத்தியதில் அவர்கள் காரில் மறைத்து வைத்து, அரசால் தடை செய்யப்பட்ட, கடல்வாழ் உயிரினமான திமிங்கலத்தின் வாயிலிருந்து வெளிவரும் உமிழ்நீரை கடத்தி வந்தது தெரியவந்தது. சுமார் 2கிலோ எடை இருந்த உமிழ்நீரின் மதிப்பு 2கோடி என கூறப்படுகிறது. இந்த திமிலிங்கத்தின் உமிழ் நீரில் இருந்து,
அம்பர்கிரிஸ் (Ambergris) என்கிற வாசனை திரவியம் செய்ய பயன்படுத்துவதாகவும் தெரியவந்தது.

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை
கைது செய்து, கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்படி நபர்களை திருச்செந்தூர் வனச்சரகம், வனச்சரக அதிகாரி அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed