July 28, 2021

திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்…

1 min read

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக கும்மிடிப்பூண்டியில் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட போது, பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா மற்றும் பேரூராட்சி அதிகாரிகளிடம் பேரூராட்சியில் மக்களுக்கு செய்யப்படும் குடிநீர் வசதி குறித்தும், பேரூராட்சியில் சேகரமாகும் குப்பைகள் அகற்றுவது, திடகழிவு மேலாண்மை திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
நிகழ்வில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜோசப் உடனிருந்தார்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மரக்கன்றுகளை நட்டு பின் அலுவலகத்தில் ஆய்வு செய்த போது கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன், ஊராட்சி தலைவர் புதுகும்மிடிப்பூண்டி டாக்டர் அஷ்வினி சுகுமாறன் , ஒன்றிய கவுன்சிலர்கள் ஏ.டி.நாகராஜ், தேவி சங்கர்,
டி.கே.வி.உஷா ரவி, வி.எம்.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் பின் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு, இறால் பண்ணைகளால் ஏற்படும் நீர் நிலை பாதிப்பு மற்றும் மீனவர் பிரச்சனை குறித்து வட்டாட்சியர் ந.மகேஷிடம் கேட்டறிந்தார்.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட போது பொதுமக்கள் அலுவலகங்களுக்கு வந்து தரும் மனுக்களுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எந்த பணியிலும் தாமதம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *