August 6, 2021

தேனி தெற்கு மாவட்ட நிர்வாகி திருநாவுக்கரசு கொலைவழக்கில், துரித நடவடிக்கை எடுக்க வேண்டி, தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

1 min read

திருவண்ணாமலை தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில், தேனி தெற்கு மாவட்ட துணை செயலாளரான திருநாவுக்கரசு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக் கோரியும், இறந்து போன தனது கட்சி நிர்வாகி குடும்பத்திற்க்கு 25 லட்ச ரூபாய் நஷ்டஈடை தமிழக அரசு வழங்க கோரியும், இறந்தவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்ப் புலிகள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் கண்ணையன், மாவட்ட துணை செயலாளர் பழனி, தணிகை மலை ஆரணி ஒன்றிய செயலாளர் பழனி, மற்றும் தலித் விடுதலை இயக்கத்தின் சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் கிச்சா, தலித் நதியா, இவர்களது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் தெரிவித்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed