October 24, 2021

தூத்துக்குடியில், மாற்றுத்திறனாளிகள், மற்றும் நாடக கலைஞர்களுக்கு, மாவட்ட கண்காணிப்பாளர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்…

1 min read
Spread the love

தூத்துக்குடியில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக, கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, வி.வி.டி சிக்னல் சந்திப்பில் மாற்றுத்திறனாளிகள் உட்பட நாட்டுப்புற கலைஞர்கள் 50 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரிசிப்பை மற்றும் காய்கறி பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் மற்றும் அதன் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இதில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், தூத்துக்குடி போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும்பெறுமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed