November 27, 2021

தென்காசி பகுதி காவலர்களுக்கு, ரோட்டரி சங்கம் மூலமாக, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது…

1 min read
Spread the love

தென்காசி மாவட்டம், இரண்டாவது அலையாக கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் காவல்துறையினரின் நலன்கருதி ரோட்டரி சங்கம் (மாவட்டம் 3212) மூலமாக, முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் ஷேக் சலீம் அவர்களால் காவல்துறையினருக்கு 5,000 துணி முககவசங்கள், கண்ணாடி முக கவசங்கள் (face shield) மற்றும் கை துடைக்கும் கிருமிநாசினி (sanitizer) ஆகியவற்றை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில்; “காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து காவலர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்படாத வண்ணம் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவும், இந்த நோய்த்தொற்றை முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து நோய் தொற்றை வெல்வோம்” எனவும், அவர் கூறினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed