January 26, 2022

டியூஜே – வின் 32வது ஆண்டில், பத்திரிக்கையாளர்களுக்கு, விடியல் தரப்போகிறார், தமிழக முதல்வர்…..

1 min read
Spread the love

தற்போது முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்ற 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையிலும், தற்போது நடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையிலும், பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைக்கபடும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். அதேபோல், தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அவர் பொறுப்பேற்கும் முன்பாகவே, “பத்திரிகையாளர்கள் முன் களப்பணியாளர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள்” என அறிவிப்பு கொடுத்து பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து மேலும், “கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் போது, களத்தில் நின்று பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு, நிவாரணத் தொகை ரூ. 5,000 வழங்கப்படும்” எனவும் “பத்திரிக்கையாளர்கள் இறந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கப்படும்” எனவும், அறிவித்து பத்திரிக்கையாளர்களுடைய குடும்பத்தினர் அனைவரும்,* பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க, மனித நேயம் கொண்ட மனிதர் ஒருவர் இருக்கிறார், என்று மகிழ்ச்சி அடையும் அளவிற்க்கு செய்தார். இந்நிலையில், சமீபகாலமாக பத்திரிகையாளர்கள் சங்கம் என்பது புற்றீசல் போல் பல புதிய, புதியதாக வந்ததால், அரசும், அதிகாரிகளும் பத்திரிக்கையாளர்களை அடையாளம் காணுவதில் மிகவும் தடுமாற்றம் அடைகின்றனர். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு, அதிகாரிகளால் தவறுதலாக அடையாளம் காட்டப்பட்ட சிலரைக் கொண்டு, பத்திரிகையாளர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது, என கூறப்பட்டு வந்தது.

இந்த தகவலை கேள்விப்பட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு பத்திரிக்கையாளர்களும், சங்கத்தின் மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களும் கொதிப்படைந்து, அந்த செய்தித்துறை அதிகாரிகள் செயலை கண்டிக்கும் வகையில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர் சுபாஷ் அவர்கள் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டு அதில், செய்தி வாசிப்பவர்களை கொண்டு செய்தி சேகரிக்கும் பத்திரிக்கையாளர்கள் உடைய நிலைகளை ஆராய ஆலோசனை கூட்டம் நடத்துவதா? என்ற கேள்வியை முன்வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த ஒரே ஒரு அறிக்கை பல அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டது !
இதற்கிடையே, நேற்று நமது செய்தித்துறை அமைச்சர் அவர்கள் நமது தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளை சந்திக்க நேரம் ஒதுக்கி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, கலைவாணர் அரங்கத்தில் இன்று
காலை 11 மணியளவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ், பொதுச் செயலாளர் ஐயா கு.வெங்கட்ராமன், பொருளாளர் சேலம் A.சேவியர் ஆகியோர் அமைச்சரை நேரிடையாக சந்தித்து நமது சங்கத்தினுடைய செயல்பாடுகளைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தனர். மாநில நிர்வாகிகள் கழுகு கே.ராஜேந்திரன், A.லட்சுமணன், முதல் செய்தி பெருமாள் மற்றும் நான் ( பொன்னேரி பாலகிருஷ்ணன் ) உடன் சென்று இருந்தோம் !

இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சரிடம் மாநில நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில்;
இந்த தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் என்பது, 32 ஆண்டுகளாக ஒவ்வொரு மாவட்ட அளவில் மட்டுமல்லாமல் தாலுகா அளவிலும் நிர்வாகிகளை கொண்டு, தெளிவான கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது எனவும், இந்த சங்கத்தில் தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர் !
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் வாரியத்துக்கு நமது சங்க உறுப்பினர்கள் பற்றிய விவரங்களையும், ஆண்டுக் கணக்கு வழக்குகளையும், பத்திரிக்கையாளர்கள் உடைய பட்டியலையும் அமைச்சர் முன் சமர்ப்பித்தனர்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மூலமாக அகில இந்திய அமைப்புகள் நிகழ்வுகளிலும், தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கெடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் போன்ற விவரங்களையும் வழங்கினர். மேலும், வருங்காலங்களில் தமிழக அரசின் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்க கூடிய நிவாரணங்கள் ஆனாலும், ஓய்வூதியங்கள் மற்றும் இழப்பீடு தொகைகள் எதுவாக இருந்தாலும், தொழிலாளர் வாரியத்தில் உள்ள பட்டியல் படி வழங்கினாலே எந்தவிதமான குளறுபடியும் இல்லாமல் இருக்கும் என்பதை வலியுறுத்தி கூறியுள்ளனர்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed