August 6, 2021

மாதவரம் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோவில் கைது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(37). இவர் மாதவரம் துணை ஆணையரின் தனிப்படையில், உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், மாதவரம் பகுதியில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்பு அந்த பெண்ணின் அக்காளுடனும் நீட்டிக்க துவங்கியது. இதை தங்கையின் 15 வயது மகள் பார்த்துள்ளார். அதனை மகள் தனது தந்தையிடம் சொல்ல கூடாது என தாயார் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், அந்த 15 வயது சிறுமிக்கும் சதீஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், பயந்து போன சிறுமி தனது தந்தையிடம், தன்னிடம் எஸ்.ஐ நடந்து கொண்ட விதத்தை எடுத்து கூறியதை தொடர்ந்து, எஸ்.ஐ சதீஷ் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தை, புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் எஸ்.ஐ சதீஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது .எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், எஸ்.ஐ சதீஷ் மற்றும் அவருக்கு உதவியதாக சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா ஆகிய 3 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

G. பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed