November 27, 2021

சென்னையில், பத்திரிகையாளர் சங்க நிறுவன தலைவர், டி.எஸ் ரவீந்திரதாஸ் அவர்களின் 9 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read
Spread the love

பத்திரிகையாளர்களின் போராளி தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு டி.யூ.ஜே தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, திருவள்ளுவர் படத்தை வரைந்த ஓவிய பெருந்தகை வேணுகோபால் சர்மா அவர்களின் புதல்வர், இயக்குனர் ( வீர மங்கை வேலுநாச்சியார் புகழ் ) ஸ்ரீராம் சர்மா அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிறுவனத் தலைவர் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களின், படத்தை வரலாற்று சிறப்புமிக்க “தாமரை” இதழின் ஆசிரியரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தேசிய நிர்வாக குழு உறுப்பினருமான தோழர் சி.மகேந்திரன் அவர்கள் திறந்து வைத்து அவர்களை பற்றிய நினைவுகளை நிகழ்ச்சியில் பதிவு செய்தார். மேலும் இந் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், தோழர் எ.எம்.வி. பிரபாகர் ராஜா அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில், 150 குடும்பங்களுக்கு, தலா 10 கிலோ அரசி வழங்கப்பட்டது.
அன்னை வாராகி அறக்கட்டளை சார்பில், குருஜி வாராஹி மைந்தன் கணபதி சுப்ரமணியம் அவர்கள், திரைப்பட தயாரிப்பாளர் எம்.எஸ்.என் குளோபல் கிரியேஷன்ஸ் வெள்ளை சேது அவர்கள், மற்றும் வாராஹி அறக்கட்டளை நிர்வாகி எம். முருகப்பன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

அதேபோல், ரோட்டரி கிளப் சென்னை ராயல்ஸ் ருக்மணி அவர்களின் முயற்சியில், மருத்துவர் தாரா பாலகிருஷ்ணன் அவர்கள், கொரோனா நோய் எதிர்ப்பு மருந்துக்களை அனைவருக்கும் வழங்கினார்.

இந்த நிகழ்வில், வடபாதி ஆதீனம் அவர்கள், இயக்குனர் எழுத்தாளர் எ.ஆர்.கே ராஜராஜன், தயாரிப்பாளர் “ஜனனி” கே.பாலு, திருநங்கைகளின் போராளி மதர் நூரி அம்மா, திருவேற்காடு ஆனந்த ஸ்வாமிகள், இயக்குனர் அருந்தவராஜா, உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பல்வேறு விதமான பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு புகழ் சேர்த்தனர்.

மாநில பொதுச் செயலாளர் ஐயா கு.வெங்கட்ராமன், மற்றும் நிர்வாகிகள் கழுகு கே.ராஜேந்தரன், பொன்னேரி பாலகிருஷ்ணன், லயன் எல்.பரமேஸ்வரன், எ.லட்சுமணன், போரூர் ஜனா, டெல்டா மண்டல செயலாளர் எழில், தேசிய குழு உறுப்பினர் அலேக்ஸ் புருட்டோ, ஜீவா பெரியசாமி, எல்.ஐ.சி வைத்தியநாதன், போரூர் பார்த்திபன், தஞ்சை தமிழ்பித்தன், கண்ணோட்டம் சண்முகம், இன் & அவுட் மதியழகன், இராமலிங்கம் சார், முதல் செய்தி பெருமாள், ஜெயா டிவி ரமேஷ் குமார், மதி ஒளி ராஜ்குமார், பல்லாவரம் ஜெயகுமார், குடியாத்தம் ஆனந்தராஜ், சிவகுமார் ராஜ்பிரபு, பொதிகை ஷாநவாஸ், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பு சேர்ந்தனர்.

முன்னதாக, சி.ஏ.ராஜா அவர்கள் ஏ எம் ராஜா அவர்கள் குரலிலும், மற்றும் கார்த்திக் அவர்கள் இளையராஜா குரல்களில், இனிமையான பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

G. பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed