October 24, 2021

வடதில்லை கிராமத்தில், அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில், பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அறக்கட்டளையின் தலைவர் இளவரசி வழங்கினார்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கண்ணிகைபேர் பகுதியில் இயங்கிவரும் அன்னை தெரேசா கல்வி மருத்துவம் விளையாட்டு சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் தலைவரும் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஊத்துக்கோட்டை தாசில்தார் டாக்டர் இளவரசி என்பவர் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தில் தன் பணியை விருப்ப ஓய்வு பெற்று பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகின்றார்.

.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பேரிடிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வடதில்லை கிராம பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை காலம் என்பதால் இப்பகுதி வாழ் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வந்தனர்.

இவர்களுக்கு உதவிடும் வகையில் கண்ணிகைபேர் கிராமத்தில் இயங்கி வரும் அன்னை தெரேசா அறக்கட்டளையின் சார்பில்,
5 கிலோ அரிசி, 10 வகையான காய்கறிகளை உள்ளிட்ட அடங்கிய தொகுப்பினை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் இளவரசி பாதிக்கப்பட்ட மக்கள் இல்லங்களை நேரடியாக தேடி சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

நிவாரண பொருட்களை வழங்கிய அப்பகுதி மக்கள் அறக்கட்டளை தலைவர் இளவரசிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமார், அறக்கட்டளையின் செயலாளர் ரகு, பூண்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ், ஊராட்சி துணைத் தலைவர் முனுசாமி, வார்டு உறுப்பினர்கள் கோவிந்தம்மாள், சுஜாதா நாகராஜ், ஊராட்சி செயலர் தனசேகரன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed