January 26, 2022

திருவண்ணாமலையில், பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையம் அனைத்தும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டடு சுத்தம் செய்யப்பட்டது…

1 min read
Spread the love

கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததனால், தமிழக அரசு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கிற்க்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடைகள் மற்றும் போக்குவரத்துகள் அனைத்தும் தடைபட்டு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது கொரோனாவின் தாக்குதல் படிப்படியாக குறைந்து வரக்கூடிய சூழ்நிலை நிலவுவதால், தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்தி வருகின்றது. அதன்படி, நாளை முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நாளை பேருந்துகளை இயக்க உள்ளதால், திருவண்ணாமலை பணிமனையில் உள்ள பேருந்துகள் அனைத்தும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. மேலும், பேருந்து நிலையங்கள் பேருந்து நிறுத்தங்கள் என அனைத்தும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed