January 26, 2022

செங்குன்றத்தில் கொரோனாவின், மூன்றாவது அலை பரவல் குறித்த, விழிப்புணர்வு பேரணியை பிரதீப் ஐபிஎஸ், துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love

செங்குன்றம் பகுதியில் உள்ள புழல் ஏரி சென்னை நகருக்கு குடிநீர் வழங்க கூடிய ஒரு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. 3,300 கன அடி தண்ணீர் இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் கூடிய அளவிற்கு கொள்ளளவு கொண்டது. சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தற்போது ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருப்பதாலும், மேலும் இந்த ஏரியை சுற்றி கரைப் பகுதிகள் சுகாதாரமின்றி இருப்பதாலும், செங்குன்றம் பகுதியில் உள்ள சமூக பணிக்குழு அறக்கட்டளை (SWOTT)
என்ற அமைப்பின் மூலம், அதன் நிறுவனரும், சமூக ஆர்வலருமான சமீர் மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, இந்த புழல் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை துவக்கியுள்ளனர்.

வாரம்தோறும் ஞாயற்று கிழமையில் நடைபெறும் தூய்மை பணியில் சமூக பணிக்குழு அறக்கட்டளை (SWOTT) அமைப்பிற்கு உறுதுணையாக பல தொண்டு நிறுவனங்களும், தனியார் பள்ளி நிர்வாகங்களும், சமூக ஆர்வலர்களும், பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்து நேரிடையாக வந்து புழல் ஏரியை சீரமைத்து வருகின்றனர். இப்பணி தற்போது 75 வது வாரத்தை அடைந்து உள்ளது. அதனுடைய அடையாளமாகவும் கொரோனாவின் மூன்றாவது அலை விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில், இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இன்று காலை 8 மணி அளவில், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும், சமூக பணிக்குழு அறக்கட்டளை (SWOTT)
ன் 75 – வது வார தொடர் சீரமைப்பு பணியின் நிறைவு நாளின் நினைவாக, ஆல்பா (Alpha) குழுமத்துடன், இணைந்து, கொரோனாவின் மூன்றாம் வகை பரவலை கருத்தில் கொண்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மரியாதைக்குரிய டாக்டர், பிரதீப் ஐபிஎஸ், (சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர்) அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அதை தொடர்ந்து, புழல் ஆலமர பகுதியிலிருந்து, சென்னை ராயல் ரைடர்ஸ் (Chennai Royal Riders) ன் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, மற்றும் மிதிவண்டி விழிப்புணர்வு, அடுத்து மாரத்தான் ஓட்டமும் நடைபெற்றது. இப் பேரணி மாதவரம் ரவுண்டானா வழியாக சென்று, புழல் ஏரியின் ஆர்ச் பகுதியில் நிறைவுற்றது.
தொடர்ந்து சமூக பணிக்குழு அறக்கட்டளை (Social Work Team Trust) ன் – சார்பாக புழல் ஏரியின் தொடர் சீர்திருத்த பணியின் -75- வது வார விழாவும் நடை பெற்றது.

அதன் ஞாபகார்த்தமாக துணை ஆணையர் அவர்கள், புழல் ஏரியின் பகுதியில் மரக்கன்றுகளை நட்டுவித்து அனைவரையும் பாராட்டினார்கள். தொடர்ந்து சமூக பணிக்குழு அறக்கட்டளை, இமை அமைப்பினர், ஆல்பா பள்ளி, விவேகானந்தா ஸ்கூல், லைப் ஆப் அதார்ஸ் அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்களால் இணைந்து உருவாக்கிய வண்ணத்துப் பூச்சி தோட்டத்தை, துணை ஆணையர் அவர்கள் பார்வையிட்டு அங்கு இருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர்களுடன் கலந்துரையாடினார்கள். தொடர்ந்து, பங்கு பெற்ற அனைத்து இந்த தூய்மை பணியில் ஈடுபடும் அனைவரையும் சந்தித்து அவர்களை ஊக்குவித்ததுடன், தனது பாராட்டுகளையும் தெரிவித்தார். அதோடு புழல் ஏரியின் தன்மை, விஸ்தீரனம் போன்ற அனைத்து தகவல்களையும். கேட்டறிந்தார். அடுத்து புழல் ஏரியின் சுற்றுச் சுவர்களில் சென்மேரிஸ் ஸ்கூல் , இக்ரா பெயின்ஸ், சமூக பணிக்குழு அறக்கட்டளை இணைந்து தீட்டிய வண்ண ஓவியங்களையும் பார்வையிட்டு, வெகுவாக பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து சமூக பணிக்குழு அறக்கட்டளை செயலர் பாரி செல்வம் அவர்கள் தங்கள் அமைப்பு பற்றிய முழு விவரங்களையும் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும், அனைத்து தன்னார்வலர்களுக்கும், சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டது. இதில் பொதுப்பணித்துறை அதிகாரி, எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினியர், பொதுப்பணித் திலகம் துணை வேந்தர் டாக்டர். தாமரைச் செல்வி சோம சுந்தரம் அவர்கள் (திருவள்ளுவர் பல்கலைக்கழகம்) மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மயில்சாமி அவர்கள், பொதுப்பணித்துறை சதீஷ்குமார் அவர்கள் மற்றும் தென்னிந்திய வாடகை ஓட்டுநர் சங்கத்தின் செயலாளர் ஜூட் மேத்யூ , நீர் மேலாண்மை திட்ட இயக்குனர் தனவெல் ராஜ் முத்துகாத்தன், குட் வோர்ட்ஸ் பப்ளிக் ஸ்கூல், விவேகானந்தா ஸ்கூல், மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சமூக பணிக்குழு அறக்கட்டளை
அமைப்பின் ஆலோசகரான, தன்வேல்ராஜன் முத்துகாத்தன் அவர்கள் பேசுகையில், இந்த புழல் ஏரியை சுத்திகரிக்கும் பணியை நாம் துவக்கி இன்றோடு 75 வது வாரம் நிறைவடைகிறது என்றாலும், தற்போது தான் 2 சதவிகிதம் நிறைவடைந்து உள்ளது. இன்னும் மீதம் உள்ள 98 சதவீதத்தை 300 வது வார இறுதிக்குள் நிறைவடையும் வகையில் நாம் திட்டமிட்டு இருக்கிறோம். இந்த புழல் ஏரியியை சீரமைத்து வளர்ச்சி பெறசெய்து மிகச் சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுவது தான், அதற்கான பணிகளை நாம் படிப்படியாக நிறைவேற்ற பட வேண்டியது உள்ளது.

நான் தமிழக முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களையும் நேரிடையாக சந்தித்து புழல் ஏரியில் நாம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துக் கூறி இருக்கிறேன். அதன்படி, அவர்கள் கூடிய விரைவில் நமது புழல் ஏரியை ஆய்வு செய்ய வருகை தர உள்ளனர் என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய இலக்கு இந்த குழல் ஏரியை சிறப்பாக சீரமைத்து படகுப் போக்குவரத்து நடத்தக் கூடிய அளவிற்கு சிறந்த சுற்றுலாத்தளமாக மாற்றுவது தான், என கூறினார். அதை தொடர்ந்து, டாக்டர் கோபால் அவர்கள் தலைமையில் இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. அடுத்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு முகக் கவசமும், கபசூர குடிநீரும் வழங்கப்பட்டது. இறுதியாக, இன்றைய நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சமூக பணிக்குழு அறக்கட்டளை நிறுவனர் சமீர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed