August 6, 2021

ராஜபாளையம் நகராட்சியில், குடிநீர் பிரச்சனையை போக்க வேண்டி, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

1 min read

இராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதை 5 நாட்களுக்கு ஒருமுறை பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டும் என 12.06.2021 அன்று நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதில், ஏற்பட்ட இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் குறைகள் கூறுவதையடுத்து இன்று (28.06.2021) நண்பகல் 2 மணி அளவில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ, நகராட்சி பொறியாளர் தங்கப்பாண்டி, அவர்களுடன் மற்றும் நகராட்சி வருவாய் ஆய்வாளர், நகரமைப்பு அலுவலர் அவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் பேசிய எம் எல் ஏ அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொது மக்களுக்கு குடிநீர் சீரான சரியான முறையில் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். ஆகவே, இராஜபாளையம் நகராட்சி பொது மக்களுக்கு குடிநீர் 5 நாட்களுக்கு ஒரு முறை சீராக வழங்கவும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை போக்கவும்,

நகராட்சி பொறியாளர் தலைமையில் குழு அமைத்து வார்டு வாரியாக ஆய்வு செய்து பொது மக்களுக்கு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகத்தில் பணியாளர்கள் யாரேனும் தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார். இந்நிகழ்வில் திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, நகராட்சி வருவாய் ஆய்வாளர் முத்துச்செல்வம், நகரமைப்பு அலுவலர் மதியழகன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed