August 6, 2021

தனது சகோதரி மற்றும் தனியார் வங்கியால் ஏமாற்றப்பட்டதாக கூறி இளைஞர் ஓருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததால் பரபரப்பு…

1 min read

தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தைச் சேர்ந்த இளைஞர் நிக்கோலஸ் என்பவர் தனது சகோதரி மற்றும் தனியார் வங்கியால் ஏமாற்றப்பட்டதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது சகோதரி செல்வராணி அவரது கணவர் சர்ச்சில் 15 லட்சம் தனக்கு கடன் தர வேண்டியது இருந்தது. இதற்கு பதிலாக அவர்களது வீட்டை எனக்கு தருவதாக ஒப்புக் கொண்டார்கள். இது எங்களது குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்றதாக தெரிவித்தார்.

இதுகுறித்து வீட்டை வாங்குவதற்காக வங்கியை அணுகும்போது எனது சகோதரிக்கு வீட்டு கடன், வாகன கடன், கிரெடிட் கார்ட் கடன் கமர்சியல் வாகன கடன் உள்ளதாக குறிப்பிட்டனர். பின்னர் கமர்சியல் வாகன கடனுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறி மேற்கொண்டு 24 லட்சத்தை வங்கியில் கட்ட வைத்தனர். இதற்கான பணத்தை நாங்கள் செலுத்திய பிறகு மீண்டும் 34 ஆயிரம் கட்டினால் மட்டுமே பத்திரத்தை உங்களுக்குத் தர முடியும் என வங்கி மேலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது வார்த்தையை நம்பி ரூபாய் 34 ஆயிரமும் கட்டிய பிறகு பத்திரம் குறித்து கேட்டதற்கு பத்திரத்தை தர முடியாது நீங்கள் மேற்கொண்டு பாக்கியிருக்கும் வாகன கடன் 14 லட்சத்தை முழுவதையும் செலுத்தினால் மட்டுமே பத்திரத்தை தர முடியும் என்றனர்.

இதனால் நாங்கள் வங்கி அதிகாரியால் ஏமாற்றப்பட்டு உள்ளோம் இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு கவனத்திற்கு கொண்டு சென்றபோது அதற்கு வங்கி சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பிய பதிலில் வீட்டுக் கடனையும் கிரெடிட் கார்ட் நிலுவை தொகையும் மட்டுமே வசூலித்தோம் என வங்கியிலிருந்து தெரிவிக்கப்பட்டதாகவும் வாகன கடன் குறித்து மறைக்கப்பட்டு உள்ளது என குற்றம்சாட்டினார். ஆகவே, தனது சகோதரி மற்றும் தனியார் வங்கியால் ஏமாற்றப்பட்டதாக கூறி இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed