November 27, 2021

திருவண்ணாமலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. சாலையோர சிறுகடை வியாபாரிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், திருவண்ணாமலை நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் வக்கீல் முத்தையன், மாவட்டச் செயலாளர் ராஜாமணி, கவுரவ தலைவர் ஜோதி, மாவட்ட தலைவர் ஞானவேல் மற்றும் நிர்வாகிகள் தங்கராஜ், மாதேஸ்வரன், புஷ்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலையோர வியாபாரிகளுக்கு சுங்கவரி கட்டணம் வசூல் செய்யும் ஏல முறையை ரத்து செய்ய வேண்டும், சாலையோர வியாபாரிகளிடம் சுங்க வரி வசூலை நகராட்சி நிர்வாகமே வசூலித்திட வேண்டும், உள்ளாட்சி காலிப்பணியிடங்களை நிரப்பிட மற்றும் வெண்டிங் கமிட்டியை அமைத்திட வேண்டும்,
தேசிய நகர்ப்புற வாழ்வாதார அடையாள அட்டையை அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கிட வேண்டும், கொரோனா நிவாரண நிதியாக சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 5000 வழங்கிட வேண்டும்.

பல நாட்களாக சாலையோரங்களில் தொடர்ந்து வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு அதே இடத்தை மீண்டும் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed