July 28, 2021

“முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சொகுசு வசதியுடன் சிறையில் உள்ளார் என்பது முற்றிலும் தவறு” என சட்டத்துறை அமைச்சர் பேட்டி…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறுகையில்; முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் குளிர் சாதன வசதியுடன் இருக்கிறார் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்,
அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் இருந்து தற்போது புழல் சிறைக்கு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளார். அவரை காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

சட்ட முறைப்படி யாருக்கு என்ன வசதிகள் செய்து கொடுக்க முடியுமோ அந்த வசதிகளை மட்டுமே நாங்கள் செய்து கொடுப்போம் என கூறினார். மேலும் கடந்த ஆட்சி காலத்தில் சட்டம் மன்ற உறுப்பினர் ஆகிய எங்களுக்கு எந்த விதமான மரியாதையும்
கொடுக்கபடவில்லை. ஆனால், தற்போது உள்ள திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அந்த மரியாதையை முறையாக நாங்கள் கொடுப்போம் அதையும் மீறி விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதும் சட்டமன்ற உறுப்பினர் விதிகளை மீறுவதற்கான வழிவகைகள் என்னவோ அதையே செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் சுமார் 45 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. ஆனால், தற்போதுள்ள திமுக ஆட்சியில் 90க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உள்ளோம்.
அமைச்சர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள் திறந்து வைத்த நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் திறப்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும், மணமேல்குடி அருகே புது குடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இறந்துவிட்டார். அவர் முறையாக பதிவு செய்யவில்லை அதற்கான வழிவகைகள் என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்து அவருக்கான நிவாரணங்கள் கிடைப்பதற்கான வழி வகை செய்யப்படும்.
அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மீன்வளத் துறை சார்ந்த மேற்படிப்பிணையும் தொடங்கி புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் உள்ள மீனவ இளைஞர்கள் படிப்பதற்கான வழிவகைகள் செய்யப்படும்.

அவர்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து தரப்படும் என கூறினார். இந் நிகழ்வின் போது புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயம்சண்முகம்,
தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ஆர். கே.கலைமணி, நகரசெயலாளர் ஆனந்த், முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து, வழக்கறிஞர்கள் பா.வெங்கடேசன், நந்தினி கண்ணன், சதீஷ், அன்பழகன், பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ராமசாமி, முருகநாராயணன், ஐ.டி.விங் ஹரி,விமலாதி, உள்ளிட்ட அறந்தாங்கி நகர திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *