January 26, 2022

திருவண்ணாமலையில், முனீஸ்வரன் கோயிலில், மர்ம நபர்கள் திருடிச் சென்ற உண்டியல் மீட்பு…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே, தேரடி முனீஸ்வரர் கோயில் உள்ளது. அந்த கோயிலில் நேற்று ஜூன் 29 அதிகாலை மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலை திருடிச் சென்றனர்.

இது குறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையின்போது, மணலூர்பேட்டை சாலை பைபாஸ் அருகே உள்ள பாலாஜி கார்டனில் திருடப்பட்ட உண்டியல் கண்டறியப்பட்டது. மேலும், உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு, சில்லறைகளை மட்டும் மர்மநபர்கள் விட்டுச் சென்றது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed