August 6, 2021

திருவண்ணாமலை வனப்பகுதியில், விலங்குகளை வேட்டையாட முயன்றவர்களில், ஒருவர் கைது மற்றொருவர் தப்பி ஓட்டம்…

1 min read

திருவண்ணாமலை வனச்சரகம் சொரகொளத்தூர் காப்புக்காட்டில் மாவட்ட வன அலுவலர் பி.ஜி அருண் லால் அவர்களின் உத்தரவின்படி, வனச்சரக அலுவலர்கள் எஸ்.மனோகரன் மற்றும் ஜி.வசந்த பாஸ்கர் அவர்களின் தலைமையில் வானகாவலர்கள் கனகராஜ், முனுசாமி வனக்காப்பாளர் கணபதி, சம்பத், ராஜாராம், அரவிந்த் ஆகியோர் அடங்கிய குழு ரோந்து பணியின் போது காப்புக்காட்டில் கொண்டம் கிராமம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த மணிவண்ணன் (42) உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மற்றும் நெத்தி பேட்டரி கொண்டு வேட்டையாட காப்புக் காட்டில் வனவிலங்குகளை தேடிக் கொண்டிருக்கும் போது சுற்றி வளைத்து பிடித்தனர், மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட மணிவண்ணனிடம் வனக்காவலர்கள் விசாரணை நடத்தியதில், அவருடன் விலங்குகளை வேட்டையாட வந்திருந்து தப்பி ஓடியது, கொண்டம் கிராமம் நரிக்குறவர் காலனி சேர்ந்த சூர்யா (22) என்ற வாலிபர் என்பது தெரியவந்தது. மேலும் வழக்குப்பதிவு செய்து வனக்காவலர்கள் தப்பியோடிய சூரியாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed