August 3, 2021

இராணிபேட்டை மாவட்ட, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், மருத்துவர்களுக்கு பாராட்டு விழா…

1 min read

தேசிய மருத்துவ தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட, தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில், அரக்கோணம் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மருத்துவர்களுக்கு அவர்களுடைய மருத்துவ சேவையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மாவட்ட தலைவர் மோசஸ் ஏற்பாட்டின் பேரில், நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கிலஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு மருத்துவர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்து பிறர் உயிர் காக்கும் சேவை செய்யும் உன்னத செயலில் ஈடுபட்டு வருபவர்கள் இவர்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்து தெரிவித்து பாராட்டி பேசினார்.

மேலும், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள், அரக்கோணம் கோட்டாட்சியர் சிவதாஸ் வட்டாட்சியர் பழனிராஜன் மற்றும் அரக்கோணம் பத்திரிகையாளர் ஊடகவியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மருத்துவர்களை மன நெகழ்ச்சியுடன் பாராட்டினர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed