July 28, 2021

தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை சமூக ஆர்வலர் வழங்கினார்…

1 min read

தென்காசி மாவட்டம், பொதுமக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் காவல்துறையின் நலன் கருதி கல்லிட் கிளப் தலைவர் அழகுராஜ் அவர்கள் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்களை நேரில் சந்தித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணி புரியும் காவல் துறையினர், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, அவர்களின் நலன்கருதி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினார். தற்போது அந்த இயந்திரம் பயன்பாட்டிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *