August 6, 2021

பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு, தனியார் நிறுவனம் சார்பில், மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கிவரும் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பம்பட்டு ஊராட்சியில் இயங்கும் மஸ்க் எனும் தனியார் கம்பெனி சார்பில், 10 கட்டில்கள் அதற்குமேல் இடப்படும் 10 படுக்கைகள், 3 ஆக்சி மீட்டர், 3 தெர்மாமீட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அதே போன்று மீஞ்சூர் ஊராட்சி குழு பெருந்தலைவர் ரவி ஏற்பாட்டில், பழவேற்காடு, கோட்டைக்குப்பம், லைட் ஹவுஸ், தாங்கல் பெருங்குளம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 52 பேருக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி பழவேற்காடு அரசு மருத்துவமனை வளாகத்தில் பழவேற்காடு அரசு மருத்துவர் ராஜ் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளையும் அரசு மருத்துவமனைக்கு படுக்கைகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மஸ்க் கம்பெனி நிர்வாகிகள் மற்றும் பழவேற்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி சரவணன், துணை தலைவர் பி.எல்.சி.ரவி திமுக நிர்வாகிகள் மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் பழவை முகம்மது அலவி, மற்றும் கு.அசோகன், எம்.கே.தமின்சா, ஜெ.எஸ்.கன்னிமுத்து,ஜெயபால், சி.எம்.ரமேஷ், காசி, கருணாகரன், பி.பழனி எ.கே.மைனுதீன், எம்.ஏ.கனி, சுப்பிரமணி, சங்கர், தேசிங்கு, ரமேஷ் விஜி, சேக்தாவூத், கருணாமூர்த்தி, இலவம்பேடு பாளையம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed