August 6, 2021

இராஜபாளையம் அரசு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவியை , அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன், இயக்கத்தை தொடங்கி வைத்தார்…

1 min read

இராஜபாளையம், அரசு மருத்துவமனைக்கு,
கிளின் மேக்ஸ் எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் சார்பாக, 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவியை , அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் அவர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அவர்கள் முன்னிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதன் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், எம்.பி தனுஷ் எம். குமார், அவர்கள், எம்.எல்.ஏ எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் அவர்கள் மாவட்ட மருத்துவபணிகள் இயக்குனர் மனோகரன், தலைமை மருத்துவர் பாபுஜி அவர்கள், இராஜை நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா,

பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ் ஷியாம்ராஜா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன், துணை சேர்மன் துரைகற்பகராஜ், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி இராஜை வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணமுருகன், மருத்துவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed