August 6, 2021

கும்மிடிபூண்டியில், காச நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி நோயாளிகளுக்கு சத்து உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு…

1 min read

கும்மிடிப்பூண்டியில் தேசிய காச நோய் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் காசநோயாளிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அவர்களுக்கு சத்தான உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார துறை மற்றும் பூந்தமல்லியில் உள்ள கிறிஸ்துவ அருட்சகோதரிகளால் நடத்தப்படும் திரு இருதய சபை சார்பிலும், காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு வார நிகழ்வு சுகாதார துறை துணை இயக்குனர்(காசநோய்) லட்சுமி முரளி தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

இதில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், தூய இருதய சபை ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி மேரி ஜோஸ்பினாள், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று கும்மிடிப்பூண்டி வட்டாரத்தை காச நோய் அற்ற பகுதியாக மாற்ற சுகாதார துறையினருடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் சுகாதார துறையினர் காச நோய் ஒழிப்பு குறித்தும், நோயின் தன்மை குறைப்பது குறித்தும் விளக்கினர். பின்னர் பூந்தமல்லி திரு இருதய சபையின் சார்பில் காச நோயாளிகள் 100 பேருக்கு 15 வகைக்கான சத்தான உணவு பொருட்கள், சோப்பு, மாஸ்க் உள்ளிட்ட தொகுப்பை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கி, காச நோயாளிகளுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் முரளிகிருஷ்ணன், கிராம சுகாதார செவிலியர்கள் கன்னியாகுமரி, ஆனந்தி, கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed