August 3, 2021

செங்கம் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊராட்சி செயலாளர் கைது…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சியில், தூய்மை காவலராக பணிபுரியும் இந்திரா என்பவருக்கு சம்பள பணம் வழங்காமல் வெகுநாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. அந்த நிலுவை சம்பளத்தை, இந்திரா ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் என அனைவரையும் நேரில் அணுகி, பல போராட்டங்களுக்கு இடையே அவருடைய சம்பளத் தொகை 25 ஆயிரம் வழங்க தலைவரும், துணைத் தலைவரும் ஏற்பாடு செய்து காசோலையாக வழங்கிய பின்னரும்,

சம்பள தொகை 25 ஆயிரம் ரூபாயை வழங்குவதற்காக அந்த ஊராட்சியில் செயலாளராக பணிபுரியும் ஸ்ரீதேவி என்பவர், “ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தான் 25 ஆயிரம் சம்பள நிலுவைத் தொகையை வங்கியில் இருந்து நான் எடுத்துக் கொடுப்பேன்” என கூறியுள்ளார். தொடர்ந்து லட்சுமியும் அவர் கணவரும் மன்றாடி ஊராட்சி உதவியாளரிடம் சம்பள நிலுவை தொகையை கேட்டும், அவர் சம்பளத் தொகையை வழங்க தொடர்ந்து மறுத்துள்ளார்.

அதனால், இந்திராவின் கணவர் முருகன் செய்வது அறியாது இருந்த நிலையில் இறுதியாக, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழங்கப்பட்ட ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாயை ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவியிடம் கொடுத்துள்ளார்.
அதனை, அடுத்து முருகனை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஸ்ரீதேவியை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், விசாரணைக்காக திருவண்ணாமலை அழைத்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed