August 6, 2021

தூத்துகுடியில், பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 5 பேர் கைது, தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு…

1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ரவுடித்தனம், கஞ்சா, போதைப்பொருள், புகையிலைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி பல ரவுடிகள் கைது செய்யப்பட்டு, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 81 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் தலைமைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கம், சாமுவேல், முதல் நிலைக் காவலர்கள், செந்தில், முத்துப்பாண்டி, மகாலிங்கம், திருமணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது முததையாபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற பானா முருகன் (29), அவரது தம்பி மாரிசெல்வம் (23), தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த இசக்கி செல்வம் என்ற செல்வம் (26), தாளமுத்துநகரைச் சேர்ந்த டைட்டஸ் (21) மற்றும் முத்தையாபுரத்தைச் சேர்ந்த கௌதம் (18) ஆகிய 5 பேரும் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ஒருவரிடம் பணத்தை கொள்ளையடித்து விட்டு வந்து நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படை போலிசார் விசாரணை செய்ததில் மேற்படி எதிரி பானா என்ற வேல்முருகன் கோவில்பட்டி மேற்கு, தூத்துக்குடி தென்பாகம், முத்தையாபுரம், சேலம் மாவட்டம் மேட்டூர், விருதுநகர் மாவடம் காரியாபட்டி, பாணல்குடி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, அடிதடி, வெட்டு மற்றும் கஞ்சா கடத்தல் என 15 வழக்குளில் ஈடுபட்டுள்ளவர் என்பது தெரியவந்துள்ளது. மேற்படி பிரபல ரவுடிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed