August 6, 2021

சோழவரம் அருகே அலமாதியில், தனியார் ஆக்கிரமித்த நிலத்தை, தாசில்தார் மணிகண்டன் மீட்டார்…

1 min read

சோழவரம் ஏரி அருகே, தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுப்பணி துறையினருக்கு சொந்தமான ரூபாய் 31 லட்சம் மதிப்பிலான நிலத்தை வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையிலான வருவாய் துறையினர் மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஏரி அருகே, அலமாதி பகுதியில் பொதுப்பணி துறையினருக்கு சொந்தமான இடத்தை உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஆக்கிரமித்து உள்ளதாக பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டனுக்கு வந்த புகார் வந்தது.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பொதுப்பணி துறையினரின் முன்னிலையில், நில அளவை செய்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூபாய் 31 லட்சம் என வட்டாட்சியர் மணிகண்டன் தெரிவித்தார்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed