July 28, 2021

பெரியபாளையம் அருகே, ராள்ளாபாடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவிலின்,
வருடாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி இடையே ராள்ளாபாடி கிராம பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் கட்டி 2 ஆண்டுகள் நிறைவடைந்து. 3 ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகமும் ஹோமங்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அதிகாலை சீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் 8 மணி அளவில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹோம குண்டங்களில் திருச்சி கணபதி புரோகிதர் பலம் கொண்ட குழுவினர் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பின்னர் ஹோமத்தில் வைத்திருந்த புனித நீரைக் கொண்டு சாய் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.

அதே போல் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கைகளால் பாலாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு சாய்பாபாவிற்கு புதிய வெள்ளி தல கிரீடம் செய்து ஆலயத்திலுள்ள சாய்பாபாவிற்கு சாட்டப்பட்டு பின்னர் மத்தியானம் 12 மணி ஆரத்தி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் குறைந்த பக்தர்கள் கலந்து கொண்டு முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஆரத்தி பூஜைகள் பாடல்கள் பாடினார்கள். அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவ சாயி சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *