August 3, 2021

வில்லிவாக்கம் ஒன்றியம், திருமுல்லைவாயல் சிட்கோ நகர் வளாகத்தில், தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு…

1 min read

மாதாவரம் தொகுதி, வில்லிவாக்கம் ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சியில் அமைந்துள்ள திருமுல்லைவாயல் மகளிர் தொழிற் பூங்கா சார்பில், தமிழக முதலைமைச்சர் அவர்களின் ஆணையின் கீழ், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதாவரம் எஸ். சுதர்சனம் அவர்களின் தலைமையில் , கொரோனா தடுபூசி முகாமும் மற்றும் சிறு, குறு சிட்கோ தொழிற் வளர்சி ஊக்கவிக்கும் வகையில் ஆய்வு கூட்டமும் நடந்தது.

இந்த ஆய்வு கூட்டத்தில், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தடுப்பூசி முகாமையும் ஆலோசனை கூட்டத்தையும் துவக்கி வைத்து, குறு, சிறு மற்றும் சிட்கோ வளர்ச்சி சம்மந்தமான ஆலோசனைகளை வழங்கினார்.

அதில், மாவட்ட கவுன்சிலர் மோரை மு.சதிஷ்குமார்,சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினரும் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆ.பிரபாகரன் மற்றும் துணை தலைவர் மற்றும் வெள்ளானூர் ஒன்றிய கவுன்சிலர் குணாதயாநிதி மற்றும் மோரை ஊராட்சி கழக செயலாளர் கோ.தயாளன் மற்றும் மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed