July 28, 2021

கும்மிடிப்பூண்டியில் பிரபல ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு, பலத்த காயங்களுடன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி அடுத்த பாலேஸ்வரம் பகுதியில் இன்று அதிகாலை தலை, முகத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஒருவர் விழுந்து கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக, சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் ரத்த வெள்ளத்தில் மயங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த நபரை மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வெட்டுக்காயங்களுடன் கிடந்தது, புது கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பிரபல ரவுடியான டிஸ்க் பாஸ்கர் என்பது தெரிய வந்தது.

இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் இவர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது. நேற்றிரவு 4பேர் மது அருந்தி கொண்டிருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் டிஸ்க் பாஸ்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீசார் ஜெகன், கார்த்திக், பிரேம்குமார் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *