July 28, 2021

பொன்னேரி அரசு மருத்துவமனையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு! இனிப்பு வழங்கிய சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலில் புறநோயாளிகள் பிரிவுக்கு சென்ற ஆட்சியர் மருத்துவர்கள் அனைவரும் பணியில் இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்தார்.

அதை அடுத்து பிரசவ பிரிவுக்கு சென்றவர் அங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்களிடம் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வரும் போது உடனடியாக அனுமதிக்கிறார்களா அல்லது காலதாமதம் செய்கிறார்களா என விசாரித்தார். உடனடியாக அனுமதிப்பதாக அந்த தாய்மார்கள் பதிலளித்தனர்.

பணியில் இருக்கும் செவிலியர்கள் பிரசவத்திற்காக பணம் ஏதாவது கேட்கிறார்களா என ஆட்சியர் கேட்டதற்கு பணம் எதுவும் கேட்பதில்லை என தெரிவித்தனர். பிரசவ வார்டில் இருந்து ஆட்சியர் வெளியில் வந்த போது அருகில் வந்த ஒரு சிறுமி தனக்கு தம்பி பாப்பா பிறந்திருப்பதாக கூறி அவருக்கு இனிப்பு வழங்கினார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட ஆட்சியர் அந்த சிறுமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அடுத்து, ஆக்ஸிஜன் மையத்திற்கு சென்ற ஆட்சியர் அதன் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து பொது வார்டு மற்றும் கொரோனா வார்டிற்கு நேரடியாக சென்ற ஆட்சியர் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் எத்தனை பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என கேட்டறிந்தார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வின்போது மருத்துவர்கள் சுப்ரியா, விஜய் ஆகியோர் உடனிருந்தனர். அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வு அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *