August 6, 2021

10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அண்ணனூர் மேம்பாலம், விரைவில் திறந்து வைக்கப்படும், பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதி…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட அண்ணனூர் – அய்யப்பாகம் இடையேயான ரயில்வே மேம்பால பணிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கிஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் முகாமிற்கு வெளியில் வாழும் இலங்கை தமிழ் அகதி குடும்பங்களுக்கு ரூ.4000 கொரோனா நிவாரண நிதியினை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.மு.நாசர் ஆவடி – அயப்பாக்கம் இணைப்பு மேம்பால திட்டத்தினை கடந்த 2008-2010-ம் ஆண்டில் ரூ.54 கோடி மதிப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கொண்டு வந்த திட்டம் என்பதால் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும். இதனால், அண்ணனூர் இரயில்வே கேட்டினை பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் கடப்பதினால் பல ஆண்டு காலமாக காலவிரையமும், பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இன்னும் ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் வீட்டிற்கு இனிப்புகள் இலவசமாக கொண்டு செல்லப்பட்டது குறித்து ஆய்வறிக்கைகள் கேட்கப்பட்டுள்ளது. அவை கிடைக்கப்பட்டதும் ஆதாரங்களுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதி குடும்பங்களுக்கு ரூ.4000-ம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது போல் திருவள்ளூர் மாவட்டத்தில் முகாமிற்கு வெளியே வசிக்கும் 500 குடும்பங்களுக்கு ரூ.4000 கொரோனா நிவாரண நிதியினை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஆவடி வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed