August 6, 2021

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது…

1 min read

திருவண்ணாமலை நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில்
அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதாகம மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பத்து நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில், ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள், ஆனால் இந்தாண்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

நினைத்தாலே முக்தி தரும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் உள்ள
தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும், சூரியன் வட திசையிலிருந்து தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக ஆனி பிரம்மோற்சவம் இன்று காலை 06.00 மணிக்கு தஷ்ணாயன புண்ணியகால கொடியேற்றம் மிதுன லக்கினத்தில்
சிவாச்சாரியார்கள் வேதாகம மந்திரங்கள் முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன்று ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது, அதனை தொடர்ந்து
முதலில் விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் சிறப்பு
அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு
காட்சி தந்தார், பிரம்மோற்சவ விழாவில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு அருணாசலேசுவரரை வழிப்பட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed