August 6, 2021

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவன், யோகாசனத்தில் கின்னஸ் சாதனை…

1 min read

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வரும் ரஞ்சன் – ஜெயலட்சுமி தம்பதியர் மகன் திவ்வியேஷ், (16) கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1, படித்து வருகிறார். மேலும்,
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஐந்து ஆண்டுகளாக யோகா பயிற்சியும் பெற்று வருகிறார்.

ஏற்கனேவ, ஒரு நிமிடத்தில், 24 பலுான்களை உடைத்து, உக்கிரேன் நாட்டை சேர்ந்த இளம்பெண் க்ருடாஸ் ருசியானா, என்பவர் கின்னஸ் சாதனை படைத்து இருந்தார். அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக, சிறுவன் திவ்வியேஷ், ஒரு நிமித்தில், 34, பலுான்களை டிம்பாசனம் மூலம் உடைத்து கின்னஸ் சாதனை படைத்தார். கின்னஸ் சாதனை படைத்த திவ்வியேஷ், மற்றும் அவரை பயிற்றுவித்த பயிற்றுனர் சந்தியா, ஆகியோரை, அகதிகள் முகாம் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed