August 3, 2021

செங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, புதிய சிக்னல்கள் நிறுவபட்டது…

1 min read

தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கோட்டை காவல் நிலையம் அருகே, உள்ள சாலையில் புதிதாக 4 தானியங்கி சிக்னல்களை ரோட்டரி சங்கத்தின்(Rottary International) மூலமாக அமைக்கப்பட்டது. அதன் இயக்கத்தினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்கள் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.

பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம், சீட்பெல்ட் போன்றவை அணிந்து சாலை விதிமுறைகள் மற்றும் சமிக்ஞைகளை பின்பற்றி நடந்தாலே விபத்தில்லா பயணம் செய்யலாம் என்று கூறினார். மேலும், செங்கோட்டை காவல் நிலைய வளாகத்தில் இயற்கை வளத்தை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் அவர்கள், செங்கோட்டை காவல் ஆய்வாளர் சியாம் சுந்தர், அவர்கள் தென்காசி போக்குவரத்து ஆய்வாளர் பிரபு அவர்கள், காவல் துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed