August 6, 2021

தென்காசியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய திட்டம்…

1 min read

தென்காசி மாவட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்களான வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, பெண்ணை மானபங்கம் படுத்தல் போன்ற குற்றங்கள். மற்றும் குழந்தை திருமணம், குழந்தைகளை தாக்குதல், பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தல் போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க “பெண்கள் உதவி மேசை” (Women Help Desk) என்ற திட்டம் துவங்கப்பட்டது.

அதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1098 மற்றும் 181 என்ற உதவி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு தொடர்பு கொள்ள முடியும். இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடப்பதாக புகார் பெறபட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து அதற்காக நியமிக்கப்பட்ட பெண் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக செய்து கொடுக்கும் விதமாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதற்காக, தென்காசி மாவட்டத்தில், 40 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு புதிதாக 20 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டதினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜீ அவர்கள் சைபர் கிரைம் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476778

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed