August 3, 2021

பழவேற்காடு முகத்துவாரம் பகுதியை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பழவேற்காடு முகத்துவாரத்தை தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். பழவேற்காடு மீனவ பகுதியானது தமிழகத்தின் மீன் ஏற்றுமதிக்கு முக்கிய பங்காற்ற கூடிய சுற்றுலா தளமாகும். இங்கு லைட் ஹவுஸ், கோட்டைக்குப்பம், தாங்கல் பெரும்புலம், பழவேற்காடு, அவுரிவாக்கம், காட்டுப்பள்ளி, சிருளப்பாக்கம், கள்ளூர், பூங்குளம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள ஆரம்பாக்கம் முதல் சுண்ணாம்பு குளம் வரை மற்றும் ஆந்திர எல்லையில் உள்ள ஏராளமான மீனவ கிராம மீனவ மக்கள் பழவேற்காடு முகத்துவாரத்தை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர்.

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதத்திற்குள் முகத்துவாரம் சுருங்கிய நிலையில் மண் அரிப்பால் மூடப்பட்டு அடைபட்டு விடுகிறது. இதற்காக பல ஆண்டு காலமாக பழவேற்காடு மீனவ மக்கள் தமிழக அரசிடம் தூண்டில் வளைவு அமைக்க கோரி கோரிக்கை வைத்து வருகின்றனர்‌. இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் 27 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான திட்டம் இயற்றப்பட்டது. பின்னர் இப்பணியை பலவிதமான சிக்கல்களுக்கு இடையே முந்தைய ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டனர்.

தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் கொண்டு போய் சேர்த்து, பழவேற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய முகத்துவாரத்தில் அடிக்கடி அடைப்பு ஏற்படாத வகையில் நிரந்தரமாக, தூண்டில் வளைவு அமைத்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரமான பழவேற்காடு முகத்துவாரத்தை பார்வையிடவும் பழவேற்காடு மீனவ மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து நிறைவேற்றிடவும் பழவேற்காட்டிற்க்கு நேரடியாக வந்திருந்தார். படகின் மூலம் முகத்துவாரம் பகுதிக்கு நேரடியாகச் சென்று, அங்கு மணல் அரிப்பு ஏற்பட்டு உள்ள இடங்களை பார்வையிட்டார்.

பின்பு மீனவ கிராம மக்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, விரைவில் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சி செய்வதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன்,
மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் உமாமகேஸ்வரி, மீன் வளத்துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த், பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மணிகண்டன், வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்
மீஞ்சூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர்கள் தேசராணி தேசப்பன், உதயசூரியன்,

பழவேற்காடு மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் நாராயணன், துணைத் தலைவர் சந்திரசேகர்,
,மீஞ்சூர் மோகன்ராஜ், அண்ணாமலைச்சேரி ஆறுமுகம், பழவை முகமது அலவி, அசோகன், அரங்கம் ஜெயபால், தேசிங்கு, எம்.கே. தமின்சா, கன்னிமுத்து, ஏசு ராஜன், பழனி, சிஎம் ரமேஷ், கு.ரமேஷ், கருணாகரன், துரை மகேந்திரன், காசி, தூயவன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கொண்டகரை ஜெயபிரகாஷ், ஜலந்தர், சந்திரசேகர், சஞ்சய்காந்தி, பழவை ஆர்.பி.எஸ். செந்தில்குமார், பழனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அபூபக்கர், சமூக ஆர்வலர்கள் குரு,காமராஜ் மற்றும் அரசு அதிகாரிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed