August 6, 2021

பொன்னேரி அருகே, வேகத்தடை அமைத்து தர வேண்டி, எம்.எல்.ஏ துரை சந்திரசேகரிடம் பள்ளி மாணவன் கோரிக்கை மனு…

1 min read

பொன்னேரி அடுத்த கொக்குமேடு வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் போது பொன்னேரி மீஞ்சூர் நெடுஞ்சாலையை மாணவர்கள் கடந்து செல்வதால் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நடப்பதால் உயிர்ச்சேதமும் ஏற்படுகின்றன.

அதனை தவிர்க்கும் பொருட்டு, அப் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பிரான்சன் மாணவர்களின் நலன் கருதி, வேகத்தடை அமைக்கக்கோரி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் மனு வழங்கினான். மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

செய்திகள் – மில்டன்

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed