August 6, 2021

கும்மிடிப்பூண்டி சேர்மேன், தன்னை, சாதிரீதியாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்த, ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவருடைய கணவர் மீது, எஸ்.பியிடம் புகார்…

1 min read

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் கும்மிடிப்பூண்டி அதிமுக சேர்மன் சிவகுமார் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா மற்றும் அவரது கணவர் ஸ்ரீதர் ஆகியோர் தம்மை , சமூகபணி செய்யவிடாமல் இடையூறு செய்வதாகவும், பட்டியல் இனத்தவர் என்பதால், தம்மை சாதி ரீதியில் திட்டி கொலை மிரட்டல் விடுவதாகவும் புகார் அளித்துள்ளார்.

தானும் ஈகுவார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த முறை அதே ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்து வந்த நிலையில், தற்போது கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு அதிமுக பெருந்தலைவராக உள்ள நிலையில், தம்மை சாதிய ரீதியாக திட்டுவதாகவும், சமூக பணிகளை செய்ய விடாமல் தடுத்துள்ளதாகவும், கடந்த 7-ஆம் தேதி கும்மிடிப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா காலம் எனவும் பாராமல் 300-க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவருடைய கணவர், ஆர்பாட்டம் நடத்தினர்.

ஈகுவார் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா மற்றும் தி.மு.க வை சேர்ந்த அவரது கணவர் ஸ்ரீதர் ஆகியோர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெளியாட்களை கொண்டு வந்து, சாதி பெயரை சொல்லி திட்டியதுடன் தகாத வார்த்தைகளால் பேசி, பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாகவும், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண் குமாரிடம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் கூறினார்.

அப்போது அவருடன் வந்திருந்த, புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்மூர்த்தி, மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர். எஸ்பி வருண்குமார் விசாரணை செய்து கொண்டிருந்த போது, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார், மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் தன்னை, ஊராட்சிமன்றத் தலைவியும் அவர் கணவர ஸ்ரீதரும், கேவலமாக பேசுவதுடன் எனது குடும்பத்தை சேர்ந்த பெண்களையும் அவதூறாக பேசுவதாகவும், அதற்கு கும்மிடிப்பூண்டி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அப்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் எப்படி உயர் பதவியில் வகிக்கலாம் என்றும் தன்னை பதவியில் இருந்து தூக்கி விட்டு திமுக ஆதரவு பெற்ற நபரை ஒன்றியகுழு தலைவராக்க முயற்சி செய்வதாகவும், மேலும் உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன், என்று மிரட்டியதால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ஊராட்சி மன்ற தலைவி உஷா மற்றும் அவருடைய கணவர் ஸ்ரீதர் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், உஷாவின் கணவரான ஸ்ரீதர் சாதி சான்றிதழையே மாற்றி கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” பட்டியல் இனத்தை சேர்ந்த தம்முடைய வளர்ச்சி பிடிக்காமல் சேர்மன் பதவியில் இருந்து தூக்கி விடுவதாகவும், பட்டியல் இனத்தவரை சேர்ந்தவர் என்பதால் தகாத வார்த்தைகள் பேசுவதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், நேர்மையான விசாரணை மேற்கொள்ள காவல் துறை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், நல்ல தீர்வை மாவட்ட காவல் துறை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும்,” சிவக்குமார் தெரிவித்தார்.

மேலும், பட்டியல் இனத்தவர் உட்கார்ந்த ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையில் உட்கார முடியாது எனக்கூறி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கால்நடை மருத்துவ மனையாக மாற்றியுள்ளதாகவும் சேர்மன் சிவகுமார் தெரிவித்தார்.

” இந்த மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தனி அதிகாரி நியமித்து விசாரணை நடத்தப்படும்” என திருவள்ளூர் எஸ்பி வருண் குமார் தெரிவித்தார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed