July 28, 2021

திருவண்ணாமலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

1 min read

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு, மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனால் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மகிளா காங்கிரஸ் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

ஸ்டேன் ஸ்வாமி மரணத்திற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அறிவொளி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எம்.பிரகலநாதன்,
எஸ். ராமதாஸ், நகர நிர்வாகி எம்.சந்திரசேகர், மாதர் சங்க நிர்வாகிகள் செல்வி, தமிழ் செல்வி, லயோலா கல்லூரி கிறிஸ்துவ அமைப்பினர் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *