August 6, 2021

புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி  வாழும் பொதுமக்களின் குறைதீர்க்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி வட்டாசியர் மணிகண்டன் தலைமையில் நடை பெற்றது.

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கொரோனா இரண்டாம் அலை பெரும் தொற்று காலம் என்பதால் பொதுமக்கள் வட்டாசியர் அலுவலகத்திற்கு நேரில் செல்வதை தவிர்க்கும் வகையில் ஆண்லைனில் விண்ணப்பிக்கமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

அந்த வகையில் பொன்னேரி வட்டத்தில் உள்ள அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மக்கள் தங்களுக்கு பட்டா, சிட்டா, முதியோர், விதவை உள்ளிட்ட உதவித்தொகை வழங்ககோரி அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆஷாகல்விநாதன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் அன்னலட்சுமியிடம் மனுக்களை வழங்கினர்.

இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்விமதுரைமுத்து, வார்டு உறுப்பினர்கள் செல்வமணி, அன்பு, திருஞானசம்பந்தன், பிரேமா, உமாமகேஸ்வரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி , ஊராட்சி செயலாளர் டில்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed