August 6, 2021

ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி, 7 லாரிகளில் எடுத்து வரப்பட்ட, 122 டன் நெல் மூட்டைகள் பறிமுதல், 7 பேரை கைது …

1 min read

ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி தமிழகத்திற்கு நெல் மூட்டைகள் கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு காவல் துறை ஏ.டி.ஜி.பி ஆபாஷ் குமாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, திருவள்ளூர் ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல் துறையினர், தமிழக-ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 6 லாரிகளை சோதனையிட்ட போது, அவை உரிய ஆவணங்களின்றியும், உரிய அனுமதி இன்றியும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 6 லாரிகளில் இருந்த 91 டன் நெல் மூட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் லாரி 6 ஓட்டுநர்களை கைது செய்தனர்.

அதேபோல, ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து வந்த லாரியில் இருந்து 31 டன் நெல் மூட்டைகளை பறிமுதல் செய்து ஒரு ஓட்டுநரை கைது செய்தனர். ஒரே நேரத்தில் 2 சோதனை சாவடிகளில் 122 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகள் – சுடர்மதி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed