August 6, 2021

கயத்தாறு பகுதியில், வீரன் முத்துக்கோன் திருவுருவ சிலைக்கு, கனிமொழி எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்…

1 min read

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் கட்டாலங்குளம் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தில் அவரது 311 வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள், சமூக நலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் அவர்கள், மீன் வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் அவர்கள் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .

அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்) ஊர்வசி அமிர்தராஜ் (திருவைகுண்டம்) மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கட்டாரங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 311 வது பிறந்த நாள் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நினைவு மண்டப நுழைவுவாயில் மற்றும் முக்கிய பகுதிகளில் இன்று (11.07.2021) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், 650 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed