September 24, 2021

கும்மிடிபூண்டியில், 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய மாணவர்கள் ஆசிரியர்களின் நெகிழ்ச்சி சந்திப்பு…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள புனித மரியன்னை பள்ளியில் 1992-1993ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்த மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு பள்ளி வளாகத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 100 ஆண்டுகளை கடந்து செயல்படும் அரசு உதவியால் இயங்கும் புனித மரியன்னை பள்ளி உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த பள்ளியில் 1992-1993ஆம் ஆண்டு 8ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் சுமார் 80பேர் அவர்களுக்கு பாடம் நடத்திய 11ஆசிரியர்களுடன் 28ஆண்டிற்கு பிறகு சந்திக்கும் நிகழ்வு நெகிழ்ச்சியுடன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அருட்சகோதரிகள் மேரி ஜெசிந்தா, அன்னம்மாள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 1992-1993ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களான தெரேசா, எழில்மதி, அமைஎழில், எலிசபெத் ராணி, பாத்திமா, ஜோசப் மங்கராணி, அன்னம்மாள், கருணா ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, மாணவர்கள் தங்களை அவர்களது ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பிறகு, ஆசிரியர்களை வரவேற்று அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். மேலும் 1992-1993ஆம் ஆண்டில் ஆசிரியர்ளோடு மாணவர்கள் எடுத்த புகைப்படத்தினை கொண்ட கேக்கினை வெட்டி ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ந்தனர்.

பின்னர், ஆசிரியர்கள் தங்களது பணி காலத் தை நினைவு கூர்ந்ததோடு, அவர்களது மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.மேலும் ஆசிரியர்ளும் மாணவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினர். இதன் பிறகு மாணவர்களும், ஆசிரியர்களும் ஒன்றாக உணவருந்திய பிறகு பாடல்கள் பாடியும், வேடிக்கை விளையாட்டுகளை விளையாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வின் போது 28ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர்களை கண்ட மாணவர்கள் சந்தோஷத்தில் அழுதது நெகிழ்வை ஏற்படுத்தியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர்கள் மற்றும் அவர்களது மாணவர்கள் இடையேயான நெகிழ்ச்சியான சந்திப்பினை 1992-1993ஆம் ஆண்டு புனித மரியன்னை நடுநிலை பள்ளியில் படித்த மாணவர்களும் இப்போது ஆரம்பாக்கம் ஊராட்சி செயலாளர் எம்.முரளி, திருவொற்றியூர் தனி வட்டாட்சியர் ஆர்.நித்தியானந்தன், புகழ்பெற்ற கணினி அறிவியல் வல்லுனர் எம்.விஜயன், தொழிலதிபர்கள் இதயத்துல்லா, சாதிக் அலி, சசிகுமார், பொறியாளர் கலாதேவி, கலைவாணி, புவனா, செல்வகாமாட்சி, ஹாகிதா பானு உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed