August 6, 2021

திருநெல்வேலியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாவட்ட காவல் துறையினருக்கு நடத்தப்பட்ட இணையவழி கலந்தாய்வுக் கூட்டம்…

1 min read

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையிலும் மேற்படி குற்றங்கள் மீது எவ்வாறான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் மேற்படி குற்றச் சம்பவங்களில் பாதிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும் அனைத்து பெண் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் அவர்கள் அறிவுரையின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைசாமி, பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் காந்தி, மற்றும் சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், ஆகியோர் முன்னிலையில் இணையவழி பயிற்சி நடத்தப்பட்டது.

இப் பயிற்ச்சி வகுப்பு முன்னீர்பள்ளம் முத்தமிழ் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இப்பயிற்சியின் போது காவல்துறையினர்க்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெகுவாக குறைக்கவும், மேற்படி குற்றங்கள் மீது விரைந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் போது அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அறிவுரை வழங்கினார்கள். இப்பயிற்சியில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed