August 6, 2021

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பாக, கம்யூனிஸ்ட் கட்சினர், பவர் கிரிட் உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலமுறை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும், பவர்கிரிட் நிறுவனம் சட்டப்பூர்வமான இழப்பீடுகளை வழங்காமல் சட்டவிரோதமாக விவசாயிகளின் பட்டா நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் சீரழிக்கும் பவர்கிரிட் நிறுவனத்திற்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெரும் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் டி.கே.வெங்கடேசன், வி சுப்பிரமணி, சிபிஎம் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம் வீரபத்திரன், நிர்வாகிகள் பிரகலநாதன், வழக்கறிஞர் அபிராமன், ராமதாஸ், லட்சுமணன் ரஜினி ஏழுமலை, சதீஷ், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed