July 28, 2021

பொன்னேரியில், புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜே.எஸ் கோவிந்தராஜன் திறந்து வைத்தார்…

1 min read

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பயன்படுத்துவதற்காக, கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டது. பொன்னேரி தொகுதியில் உள்ள அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் துவங்கி, அனுப்பம்பட்டு வரை உள்ள ரயில் நிலையங்கள் மார்கமாகவும், பழவேற்காடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, பேருந்து மார்க்கமாகவும் வரக்கூடிய மக்கள் அனைவரும் எளிதில் வந்து சட்டமன்ற உறுப்பினரை சந்திக்கும் வகையில், பொன்னேரியில் உள்ள ரயில் நிலையம் அருகே சங்கர் நகர் பகுதியில், புதியதாக அந்த அலுவலகத்தை அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் கா.சுந்தரம் அவர்கள் முயற்சியில் கட்டப்பட்டு, அதை பயன்படுத்தியும் வந்தார்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பயன்படுத்தப்படாமல் பூட்டி கிடந்தது. அதனால் அந்த அலுவலகத்தை சுற்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடந்த நிலையில், தற்போது பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரை சந்திரசேகர் பொன்னேரி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள,
பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த கட்டிடத்தை புதுப்பிக்க ஏற்பாடு செய்தார்.

புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில்,
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.எஸ் கோவிந்தராஜன் திறந்து வைத்தார். அந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ரவி, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ், மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ், பொன்னேரி நகர செயலாளர் விஸ்வநாதன், மற்றும் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் டி.எல்.எஸ். சதாசிவலிங்கம், மாவட்ட தலைவர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உரையாற்றுகையில், “பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி கட்சியில் இருந்த திமுக மற்றும் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்பட அனைவரும் எனது வெற்றிக்காக அயராது உழைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும், அவர் உரையாற்றுகையில், ” நமது நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், காங்கிரஸ் கட்சி என்றால் வாரிசுகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் கட்சி என்ற ஒரு முத்திரையை மாற்றி அமைக்கும் வகையில், கடைக்கோடியில் இருக்கும் என்னை பொன்னேரி தொகுதி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுவதற்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர் ” என்றும்,

அதேபோல், திமுக மாவட்ட பொறுப்பாளரான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் டி.ஜே.எஸ் அவர்கள் பகலில் அவருடைய தொகுதியில் பணியாற்றி விட்டு இரவு நேரத்தில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்தும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டும், என்னுடைய வெற்றிக்காக உழைத்தார் ” என்றும்,

அதேபோல், ” மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் அவர்கள் நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மிகவும் அரும்பாடுபட்டவர். ஒவ்வொரு கிராமம் கிராமமாக என்னை அழைத்து கொண்டு ஒவ்வொரு கட்சி தொண்டர்களிடமும் மிகவும் அன்புடன் பேசி என் வெற்றிக்காக உழைத்தார்.”

அதே போல், “விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் என்னுடைய வெற்றிக்காக உழைத்து இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தோழர்கள் என்னை எதிர்பார்க்கவே மாட்டார்கள். நான் இல்லாவிட்டாலும் அவர்களுடைய பணியை அவர்கள் செய்து கொண்டே இருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் நான் என்றும் கடமைப் பட்டவனாக இருப்பேன். ” என கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

மேலும், இந் நிகழ்ச்சியில், தமிழன் இளங்கோவன், பொன்னேரி ஜோதீஸ்வரன், மெதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், தமிழ் உதயன், வல்லூர் தமிழரசன், நந்தியம்பாக்கம் கதிரவன், விடுதலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில நிர்வாகி நெடுஞ்செழியன், மீஞ்சூர் அபூபக்கர், பொன்னேரி மதன், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜீவா, கோபால், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகி கோவர்தனன் பொன்னேரி கார்த்திக், புழல் குபேந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *