July 28, 2021

பழவேற்காடு பகுதியில், பேருந்து நிறுத்தம் அமைத்து தரக்கோரி, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம், திமுக கட்சி நிர்வாகிகள் கோரிக்கை…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அரசு ஓட்டுநர் பயிற்சி மையத்தையும் பார்வையிட்டு, பின்னர் கும்மிடிப்பூண்டி பகுதியில், பேருந்து பணிமனை அமைய உள்ள இடத்தையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட வந்திருந்தார். அப்போது, பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பழவேற்காடு பகுதி திமுக நிர்வாகிகள் சார்பில் ஒரு கோரிக்கை மனுவை போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் வழங்கினார்கள்.

அதில், பழவேற்காடு பகுதியில் கடந்த திமுக ஆட்சியின் போது மாநகரப் பேருந்துகள் வந்து செல்லும் அளவிற்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், பேருந்துகள் அனைத்தும் பழவேற்காடு பஜார் வீதியிலேயே நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, பழவேற்காடு பகுதியில் பேருந்து நிறுத்தம் புதிதாக அமைத்து தர வேண்டி, கோரிக்கை மனுவை அளித்தனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் பழவை முகம்மது அலவி மனுவை வழங்கினார். அப்போது அவருடன் பழவேற்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழவை ரவி, கன்னிமுத்து அசோகன், தமின்ஷா, ஆகியோர் உடன் இருந்தனர். மனுவைப் பெற்று கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர், ” இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில், பழவேற்காடு பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என வாக்குறுதி அளித்தார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *