August 6, 2021

பூண்டி ஒன்றியம் பேரிடிவாக்கம் ஊராட்சியில், ஸ்ரீ சாய் தர்ஷன் டிரஸ்ட் சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது…

1 min read

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் அதிகம் இருந்ததால், தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியது அதனால், தமிழகம் முழுவதும் ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அதே நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் உள்ள மக்களுக்கும் நிலவி, வேலை வாய்ப்பு இன்றி மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இந் நிலையில், பேரிட்டிவாக்கம் ஊராட்சி மன்றதலைவர் தில்லைகுமார் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், இன்று பேரிட்டிவாக்கம், பகுதியில் உள்ள 50 குடும்பங்களுக்கு, ஸ்ரீ சாய் தர்ஷன் டிரஸ்ட்
சார்பில், கண்ணன், திவ்யா ஆகியோர் 5-கிலோ அரிசி, 1 கிலோபருப்பு , 1லிட்டர்எண்ணெய், 1கிலோ ரவை, 1கிலோ சக்கரை, துணிசோப்பு, குளியல்சோப்பு ஆகியவைகள் உள் அடங்கிய நிவாரண தொகுப்பினை அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முனுசாமி, ஊராட்சி செயலர் தனசேகரன் மற்றும், வார்டு உறுப்பினர்கள் சீனிவாசன், கோவிந்தம்மாள், புனிதா, லலிதாஜெயரங்கன், சுஜாதாநாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed